வயநாடு
பிரியங்கா காந்தி தனது தேர்தல் வெற்றிக்கு பிறகு முதல் முறையாக வயநாடு வந்துள்ளார்.
காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி நாடாளுமன்ற தேர்தலில் கேரள மாநிலம் வயநாடு மற்றும் உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலி தொகுதிகளில் போட்டியிட்டு 2 தொகுதிகளிலும் அபார வெற்றி பெற்றார். பிறகு வயநாடு எம்.பி. பதவியை ராஜினாமா செய்வதாக ராகுல் காந்தி அறிவித்த நிலையில், அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.
கடந்த 13-ந்தேதி வயநாடு தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக பிரியங்கா காந்தி, பா.ஜ.க. வேட்பாளராக நவ்யா அரிதாஸ், இடதுசாரி கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வேட்பாளராக சத்யன் மெகோரி களமிறங்கினர். கடந்த 23-ந்தேதி வாக்குகள் எண்ணப்பட்டு வயநாடு மக்களவை தொகுதியில் 4 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் பிரியங்கா காந்தி வெற்றி பெற்றார்.
இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு முதல் முறையாக எம்.பி. ஆக வயநாடு தொகுதிக்கு பிரியங்கா காந்தி இன்று ராகுல் காந்தியும் வருகிறார். இருவரும் வயநாடு தொகுதியில் நடைபெறும் பல்வேறு பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு அங்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பிரியங்கா காந்தி கலந்து கொண்டு பேச உள்ளனர்.