பல்பூர்

ந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவை தேர்தல் நடக்க உள்ள மத்தியப் பிரதேசத்தில் நேற்று காங்கிரஸ் செயலர் பிரியங்கா காந்தி பிரசாரத்தைத் தொடங்கி உள்ளார்.

மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைத்திருந்த நிலையில், கடந்த 2020-ம் ஆண்டு ஜோதிராதித்ய சிந்தியா மற்றும் அவரது ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் கட்சி மாறியதால், பா.ஜனதா ஆட்சியைப் பிடித்தது.  மத்தியப் பிரதேசத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது.

ஆட்சியைத் தக்க வைக்க ஆளும் பா.ஜனதா தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இடையில் பறிகொடுத்த ஆட்சியை மீண்டும் பிடிக்க காங்கிரஸ் கட்சி போராடி வருகிறது.

இவ்வாண்டு இறுதியில் நடைபெறும் தேர்தலுக்காகக் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா நேற்று தனது பிரசாரத்தைத் தொடங்கினார். ஜபல்பூரில் நடந்த பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய அவர், சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான மாநில பா.ஜனதா அரசை கடுமையாக விமர்சித்தார்.

முன்னர் மத்தியப் பிரதேசத்தின் ஜீவாதாரமாக கருதப்படும் நர்மதை நதியில் பிரியங்கா வழிபாடு நடத்தினார். இதையொட்டி குவாரிகாட்டில் அவர் விநாயகர் சிலையுடன் சென்று வழிபாடு செய்தார்  இந்நிகழ்வில் மத்தியப் பிரதேச காங்கிரஸ் தலைவர் கமல்நாத், மாநில பொறுப்பாளர் ஜே.பி.அகர்வால் மற்றும் விவேக் தங்கா எம்.பி. உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.