டில்லி

களிர் இட ஒதுக்கீடு என்பது மோடி அளித்துள்ள வெற்றி வாக்குறுதி எனப் பிரியங்கா காந்தி கருத்து தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் ராஜஸ்தான் மாநிலச் சட்டசபைத் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் காங்கிரஸ் பொதுச் செயலர் பிரியக்கா காந்தி கலந்து கொண்டு உரையாற்றினார்  அப்போது அவர் பிரதமர் மோடி ஒரு கோவிலுக்கு நன்கொடை கொடுத்த போது அந்த உறையை பிரித்து பார்த்த போது அதில் ரூ.21 மட்டுமே இருந்ததாக  தொலைக்காட்சியில் செய்தி வந்ததாகத் தெரிவித்தார்.

பாஜகவினர் இதனால் கடும்  அதிருப்தி அடைந்தனர். இதையொட்டி பாஜகவினர் பிரியங்கா காந்தி மீது நடவடிக்கை எடுக்குமாறு தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்து உள்ளனர்.

பிரியங்கா நேற்று தனது சமூக வலைத்தள பக்கத்தில்,

”என்னுடைய கருத்து ஒன்றால் பாஜகவினர் மிகுந்த கோபத்தில் உள்ளனர்.  நான் பிரதமர் மோடி, தேவநாராயண் கோவிலுக்கு அளித்த நன்கொடை உறையில் ரூ.21 இருந்தது தொடர்பாக தொலைக்காட்சியில் பார்த்ததை தான் சொன்னேன்’

மோடிஜியின் உறை காலியாக இருப்பதையே அவரது பணிகள் காட்டுகின்றன. மோடியின்  மகளிர் இட ஒதுக்கீடு, சாதிவாரி கணக்கெடுப்பு, கிழக்கு ராஜஸ்தான் கால்வாய் திட்டம் அனைத்தும் வெற்று வாக்குறுதிகள்தான். ஏனெனில் மோடிஜியின் உறை காலியாக உள்ளது”

என்று பதிவிட்டுள்ளார்.