சகவாடா, ராஜஸ்தான்’
பிரதமர் மோடி ராஜஸ்தான் முதல்வர் வேட்பாளரைத் தேடி அலைவதாகப் பிரியங்கா காந்தி கிண்டல் செய்துள்ளார்.
வரும் 25 ஆம் தேதி 200 சட்டமன்றத் தொகுதிகள் கொண்ட ராஜஸ்தான் சட்டசபைக்குத் தேர்தல் நடந்து டிசம்பர் 3ம் தேதி வாக்குகள் எண்ணப்படுகின்றன. இப்போது ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சியில் உள்ளதால் வரும் தேர்தலிலும் அமோக வெற்றி பெற்று ஆட்சியைத் தக்க வைக்கக் காங்கிரஸ் கட்சியினர் தீவிர களப்பணியாற்றி வருகிறார்கள்.
அவ்வகையில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி இன்று ராஜஸ்தான் மாநிலம் சகவாடாவில் பிரசாரம் மேற்கொண்டார்.
பிரியங்கா காந்தி தனது உரையில்
”பாஜக ராஜஸ்தான் மாநிலத்தில் சிதறிவிட்டது. அங்கு முதல்வர் பதவிக்கான வேட்பாளர் யாரும் இல்லை. மாநிலத்தின் மூலை முடுக்கெல்லாம் பிரதமர் செல்வது சில சமயங்களில் அவர் தனது கட்சியின் முதல்வர் வேட்பாளரைத் தேடுவது போல் தெரிகிறது.
யார் அரசியலில் உணர்வுகளையும் மதத்தையும் பயன்படுத்தினாலும் அவர்களிடம் மக்கள் கவனமாக இருக்கவேண்டும். தற்போது நாட்டில் நிலவும் பணவீக்கத்தால் விவசாயிகள் உள்பட அனைத்து மக்களும் பாதிக்கப்படுகின்றனர்.”
என்று தெரிவித்துள்ளார்.