டில்லி

ராகுல் காந்தி ராஜினாமா செய்வதாக அறிவித்தது குறித்து பிரியங்கா வதேரா காந்தி கருத்து தெரிவித்துள்ளார்.

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் அமேதி தொகுதியில் தோல்வி அடைந்த ராகுல் காந்தி கேரளாவின் வயநாடு தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார். இது குறித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் தமக்கு ராகுல் காந்தி அமேதி தொகுதியில் தோற்று விடுவோம் என்னும் பயத்தால் வயநாட்டிலும் போட்டி இட்டது தெரியும் என கூறி உள்ளார். அத்துடன் அதை அப்போதே சொல்லி இருந்தால் பாஜக பயன் அடையக்கூடும் என கருதியதால் சொல்லவில்லை என தெரிவித்துள்ளார்.

மக்களவை தேர்தல் தோல்விக்கு பொறுபேற்று காங்கிரஸ் செயற்குழுவிடம் தனது ராஜினாமாவை அளிக்க போவதாக ராகுல் காந்தி தெரிவித்தார். ராஜினாமாவை ஏற்க காங்கிரஸ் செயற்குழு மறுத்துள்ளது. ப சிதம்பரம், ஏகே அந்தோணி, அகமது படேல் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் தலைமை பதவிக்கு ராகுலே ஏற்றவர் எனவும் அவர் ராஜினாமா செய்தால் தொண்டர்கள் தற்கொலை செய்துக் கொள்வார்கள் எனவும் கருத்துதெரிவித்தனர்.

காங்கிரஸ் செயலரும் ராகுல் காந்தியின் சகோதரியுமான பிரியங்கா காந்தி இது குறித்து, “ராகுல் காந்தி தொடர்ந்து பாஜக மற்றும் ஆர் எஸ் எஸ் அமைப்பை எதிர்த்து அரசியல் ந்டத்தி வருகிறார். அதை நிறுத்த வேண்டும் என அந்த அமைப்புகள் எண்ணி இருக்கின்றன தற்போது அவர் ராஜினாமா செய்தால் அது அந்த அமைப்புக்களில் வலையில் அவர் விழுந்ததை போலாகும். ராகுலின் ராஜினாமா பாஜகவுக்கு நன்மை அளிக்கும்” என தெரிவித்துள்ளார்.