இந்தியர்கள் உள்பட 1,400 பேரின் வாட்ஸ் அப் தகவல்களை இஸ்ரேல் உளவு நிறுவனம் திருடியதாக எழுந்துள்ள தகவல்களில் அதிர்ச்சியூட்டம் தகவல்கள் வெளியாகி வருகிறது. இதுகுறித்து ஏற்கனவே இந்திய அரசுக்கு தெரிவித்து விட்டதாக வாட்ஸ் அப் நிறுவனம் கூறி உள்ளது. இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி எழுப்பியிருந்த சந்தேகம் இதன் மூலம் உறுதியாகி உள்ளது. மோடி அரசு, மக்களுக்கு மாபெரும் துரோக்கத்தை செய்துள்ளது.
பிரபலமாக உள்ள சமூக வலைதளமான வாட்ஸ்அப் செயலியை ஃபேஸ்புக் நிறுவனம் நடத்தி வருகிறது. வாட்ஸ்அப் நிறுவனத்தை உபயோகப்படுத்தி வரும், இந்தியா உள்ளிட்ட 20 நாடுகளைச் சேர்ந்த, முக்கியமான அரசு அதிகாரிகள், ராணுவ அதிகாரிகளின் மொபைல் போன் செயல்பாடுகள், வாட்ஸ்அப் செயலி மூலம், திட்டமிட்டு உளவு பார்க்கப்பட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியிருக்கிறது. இஸ்ரேலைச் சேர்ந்த உளவு சாப்ட்வேர் பீகாசஸ் மூலம் இந்தியாவைச் சேர்ந்த முக்கிய பத்திரிகையாளர்கள் , மனித உரிமை ஆர்வலர்கள், அரசியல்வாதிகள் ஆகியோரின் வாட்ஸ் அப் தகவல்களை உளவு பார்த்ததாக தகவல் வெளியானது.
இதுகுறித்து கருத்து தெரிவித்திருந்த, இஸ்ரேலிய நிறுவனத்துடன் மத்திய அரசு இணைந்து செயல்பட்டி ருக்குமோ என்று சந்தேகம் உள்ளதாகவும், அப்படியிருந்தால், அது மிகப்பெரிய உரிமை மீறல் என்று என்று குற்றம் சாட்டியிருந்தார்.
அதே நேரத்தில், உளவு பார்க்கப்பட்ட விவகாரம் குறித்து, வாட்ஸ்நிறுவனத்திடம் விளக்கம் கேட்டு மத்தியஅரசு நோட்டீஸ் அனுப்பியிருந்தது.
இந்த நிலையில், வாட்ஸ்அப் நிறுவனம் பதில் தெரிவித்து உள்ளது. அதில், இந்தியர்களின் வாட்ஸ்அப் தகவல்கள் திருடப்பட்டது தொடர்பாக கடந்த மே மாதமே அரசுக்கு தகவல் தெரிவித்ததாக கூறி உள்ளது.
இந்திய கணினி தாக்குதல் தடுப்பு அமைப்பான சி.இ.ஆர்.டி.யிடம் உளவு பார்த்த தகவலை வாட்ஸ்அப் நிறுவனம் தெரிவித்தது என்றும், உளவு பார்த்தது தெரிந்த உடனேயே அந்த மென்பொருளை தயாரித்த என்எஸ்ஓ மீது வழக்கு தொடர்ந்ததையும் வாட்ஸ்அப் நிறுவனம் சுட்டிக் காட்டியுள்ளது.
மேலும், தனி நபர்களிளுக்கு வரும் தகவல்களை பாதுகாப்பதற்கே முன்னுரிமை தருவோம் என உறுதி அளித்துள்ள நிலையில், உபெகாசுஸ் என்ற மென்பொருள் மூலம் உளவு பார்க்கப்பட்டதையோ, எந்த வகையில் தகவல்கள் திருடப்பட்டன என்பது பற்றியோ அதில் கூறவில்லை.
வாட்ஸ்அப் நிறுவனத்தின் இந்த பதில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மோடி அரசு பிரபலமானவர்களை கண்காணிக்கும் வகையிலேயே உளவு நிறுவனத்துடன் இணைந்து, இந்த மோசடியில் ஈடுபட்டிருக்கும் என்று சமூக வலைதளங்களில் விமர்சிக்கப்பட்டு வருகிறது.