லக்னோ: உ.பி.யில் ஆட்சியை பிடிக்க கடுமையாக பணியாற்றி வரும் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா வத்ரா, மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சிக்க வந்தால் ‘ஆஷா’ பணியாளர்களுக்கு மாதம் ரூ.10ஆயிரம் வழங்கப்படும் அறிவித்து உள்ளார். ஏற்கனவே பெண்களுக்கு ஸ்கூட்டர் உள்பட பல்வேறு இலவச அறிவிப்புகளை வெளியிட்டுள்ள பிரியங்கா, தற்போது அடுத்த அதிரடியாக  இதை தெரிவித்து உள்ளார்.

உ.பி.யில் 2022ம் ஆண்டு மார்ச் அல்லது ஏப்ரலில் சட்டமன்ற தேர்தல் நடைபெறும் வாய்ப்பு உள்ளது. இதனால், அங்கு இப்போது தேர்தல் களை கட்டியுள்ளது. ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள பாஜக போராடி வரும் நிலையில், ஆட்சியை கைப்பற்ற காங்கிரஸ் கட்சியும், அதன் பொதுச் செயலாளர் பிரியங்காவும் தீவிரமாக களப்பணியாற்றி வருகின்றனர்.

இந்த நிலையில், யோகி அரசு, அங்கீகாரம் பெற்ற சமூக சுகாதார ஆர்வலர்களை (ஆஷா) அவமதிப்பதாக குற்றம் சாட்டி உள்ள பிரியங்கா காந்தி,  மேலும், வரும் சட்டமன்ற தேர்தலில் வெற்றிப்பெற்று காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், ஆஷா மற்றும் அங்கன்வாடி பணியாளர்களுக்கு மாதம் ரூ.10,000 வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இலவச ஸ்கூட்டர், விவசாய கடன் தள்ளுபடி, 20லட்சம் அரசு வேலை உள்பட 7 அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது காங்கிரஸ் கட்சி…

2022 உ.பி. சட்டமன்றத்தேர்தலில் பெண்களுக்கு 40% ஒதுக்கீடு! பிரியங்கா காந்தி தகவல்…