மீரட்
காவல்துறையினரால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பீம சேனை தலைவர் சந்திரசேகர் ஆசாத் ஐ பிரியங்கா காந்தி நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

உத்திரப் பிரதேச மாநிலத்தில் பீம சேனை என்னும் தலித் அமைப்பை நடத்தி வருபவர் சந்திரசேகர ஆசாத். இவர் நேற்று மீரட் நகரில் ஒரு பேரணியை நடத்தினார். அந்த பேரணியில் ஏராளமான நான்கு சக்கர மற்றும் இரு சக்கர வாகனங்கள் கலந்துக் கொண்டன.
அவற்றின் எண்ணிக்கை தற்போதைய தேர்தல் கட்டுப்பாட்டு சட்டத்தின் படி அதிகமாக உள்ளதாக கூறி அவர் உத்திரப் பிரதேச காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். அப்போது அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. அதை ஒட்டி அவர் மீரட் மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டார்.,
இன்று காங்கிரஸ் செயலர் பிரியங்கா காந்தி மீரட் மருத்துவமனைக்கு சென்று சந்திரசேகர் ஆசாத்தை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். காங்கிரஸ் செயலரான பிரியங்கா காந்திக்கு உத்திரப் பிரதேச கிழக்கு காங்கிரஸ் பொறுப்பும் அளிக்கப்பட்டுள்ளது தெரிந்ததே.
[youtube-feed feed=1]