கர்நாடகா:
சட்டசபை தேர்தல் பிரசாரத்துக்கு, அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலர் பிரியங்கா, இன்று கர்நாடகாவுக்கு வருகை தருகிறார். மைசூரு மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்கிறார்.
கர்நாடக சட்டபை தேர்தலில், பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வர வேண்டும் என, காங்கிரஸ் இலக்கு நிர்ணயித்துள்ளது. எனவே மாநில, மத்திய தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். காங்கிரஸ் முன்னாள் எம்.பி., ராகுல், ஏற்கனவே சில முறை, மாநிலத்துக்கு வந்து பிரசாரம் செய்துள்ளார். இன்று மைசூரு மாவட்டத்தில், பிரியங்கா சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
டி.நரசிபுரா தொகுதியின், ஹளவரஹுன்டியில் பொதுக்கூட்டம் நடக்கிறது. மதியம் 12 மணி முதல், 1 மணி வரை நடக்கும் கூட்டத்தில், பிரியங்கா பங்கேற்கிறார்.
மதியம் 3 மணி முதல், 4 மணி வரை பெண்களுடன் கலந்துரையாடுகிறார். அதன்பின் கே.ஆர்.நகரில் மாலை 5 முதல் 6.30 மணி வரை நடக்கும் பேரணியில் பிரியங்கா பங்கேற்கிறார். தோபம்மன கோவிலில் இருந்து, 2 கி.மீ., வரை பேரணி நடக்கிறது.