மொழியியலின் தந்தை என்று போற்றப்படும் பாணினி கி.மு. 500 ல் எழுதிய ‘மொழி இயந்திரம்’ என்று வர்ணிக்கப்படும் இலக்கண புதிருக்கு கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த இந்திய மாணவர் தீர்வு கண்டிருக்கிறார்.

2500 ஆண்டுகளாக தீர்வு காணப்படாத இந்த இலக்கண புதிருக்கான தீர்வை ரிஷி ராஜ்போப்பட் என்ற 27 வயது ஆராய்ச்சி மாணவர் வியாழன்று வெளியிட்டார்.

ஒரு வார்த்தையின் அடிப்படை மற்றும் பின்னொட்டுகள் (suffixes) குறித்த 4000 விதிகள் குறித்து பாணினியின் படைப்பான அஸ்தாத்யாயியில் விவரிக்கப்பட்டுள்ளது.

இந்த மொழி இயந்திரம் மூலம் வார்த்தையின் அடிப்படை மற்றும் பின்னொட்டுகளை கொண்டு ஒரு படிப்படியான செயல்முறையின் மூலம் இலக்கணப்படி சரியான சொற்களாகவும் வாக்கியங்களாகவும் மாற்ற உதவும்.

இதற்கான தீர்வை அல்கோரிதம் எனும் வழிமுறை மூலம் ஓராண்டு ஆராய்ச்சியின் முடிவில் ரிஷி ராஜ்போப்பட் கண்டுபிடித்திருக்கிறார்.

இந்த வழிமுறையை கணினி செயல்முறையிலும் பயன்படுத்த முடியும் என்று கூறப்படுகிறது.

2500 ஆண்டுகளாக தீர்க்கப்படாத ஒரு இலக்கண புதிருக்கு ரிஷி ராஜ்போப்பட் தீர்வு கண்டிருப்பதற்கு காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி பாராட்டு தெரிவித்துள்ளார்.