முகநூலில் பிரியங்காவின் படத்தை பதிவிட்ட ராகுல் காந்தி : வைரலாகும் புகைப்படம்

Must read

டில்லி

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது சகோதரியும் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலருமான பிரியங்கா காந்தியின் படத்தை தனது முகநூலில் பதிந்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலராக பிரியங்கா காந்தி தற்போது நியமிக்கப்பட்டுள்ளார்.   மேலும் உத்திரப் பிரதேச கிழக்குப் பகுதின் காங்கிரஸ் கட்சி பொறுப்பும் அவருக்கு அளிக்கப்பட்டுள்ளது.

அவரது அரசியல் வருகை  காங்கிரஸ் கட்சியினருக்கு உற்சாகம் அளித்துள்ளது.  அத்துடன் இந்த மாத இறுதிக்குள் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலை முடிவு செய்ய பிரியங்காவின் உதவியை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கோரி  உள்ளார்.

பிரியங்கா காந்தி மற்றும் உத்திரப் பிரதேச மேற்குப் பகுதி பொறுப்பாளர் ஜோதித்ராதித்ய சிந்தியா ஆகியோரின் பதிவு செய்யப்பட்ட தொலைபேசி அழைப்புக்கல் 60 லட்சம் பேருக்கு அனுப்பபட்டுள்ளது.

அந்த பதிவில் பிரியங்கா காந்தி ”நான் நாளை லக்னோ வருகிறேன்.  அரசியலில் புதிய பாதையை நாம் அனைவரும் சேர்ந்து உருவாக்குவோம்” என பிரியங்கா காந்தி அழைப்பு விடுத்துள்ளார்.

இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது அதிகாரபூர்வ முகநூல் பக்கத்தில் ”இதோ நாங்கள் ஐக்கிய முற்போக்கு கூட்டணி” என பதிவிட்டுள்ளார்.   அத்துடன் அதில் தானும், பிரியங்கா காந்தியும் ஜோதித்ராத்ய சிந்தியாவுடன் உள்ள புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இதை இது வரை சுமார் 750  பேர் பகிர்ந்து இந்த புகைப்படம் வைரலாகி உள்ளது.   அத்துடன் இந்த பதிவுகு 10000 பேர் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

More articles

Latest article