பெங்களூரூ

ர்நாடகா தேர்தல் முடிவுகள் இந்திய அரசியலுக்குக் கிடைத்த வெற்றி எனப் பிரியங்கா காந்தி கூறி உள்ளார்.

கர்நாடகா சட்டப்பேரவையின் மொத்தமுள்ள 224 தொகுதிகளுக்கு நடைபெற்ற பொதுத் தேர்தலில் காங்கிரஸ் -128 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இங்கு ஆட்சி அமைப்பதற்கு 113 இடங்கள் தேவையான நிலையில் 128 இடங்களில் வெற்றி பெற்று அறுதிப் பெரும்பான்மையுடன் காங்கிரஸ் ஆட்சி அமைக்கிறது.

ஆளும் பாஜக இதுவரை 60 இடங்களில் வெற்று பெற்று ஆட்சியை இழந்துள்ளது. மதச்சார்பற்ற  ஜனதா தளம் 19 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. மற்ற கட்சிகள் – 4 இடங்களில் வெற்றி பெற்றுள்ளன. கர்நாடகாவில் அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்ற காங்கிரஸ் ஆட்சி அமைக்கிறது.

காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலர் பிரியங்கா காந்தி,

“காங்கிரஸுக்கு வரலாற்றுச் சிறப்புமிக்க ஆணையை வழங்கிய கர்நாடக மக்களுக்கு நன்றி. இது உங்கள் பிரச்சினைகளுக்குக் கிடைத்த வெற்றி, கர்நாடகாவின் வளர்ச்சிக்கு முன்னுரிமை அளித்ததன் வெற்றி. இந்திய அரசியலுக்குக் கிடைத்த வெற்றி. இந்த வெற்றிக்காகக் கடினமாக உழைத்த கட்சித் தொண்டர்கள் மற்றும் தலைவர்களுக்கு என் வாழ்த்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.  உங்கள் கடின உழைப்பு சிறந்த பலனைத் தந்தது. மாநில மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றக் காங்கிரஸ் அயராது பாடுபடும்.”

என்று தெரிவித்துள்ளார்.