வயநாடு
காங்கிரஸ் பொதுச் செயலர் பிரியங்கா காந்தி வயநாடு பிரசார கூட்டத்தில் மத்திய அரசை தாக்கி பேசியுள்ளார்
மக்களவை தேர்தலில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ரேபரேலி மற்றும் வயநாடு ஆகிய இரண்டு தொகுதிகளில் ராகுல் காந்தி போட்டியிட்ட நிலையில் இரண்டிலுமே வெற்றி பெற்றார். எனவே, வயநாடு தொகுதி எம்பி பதவியை ராகுல் காந்தி ராஜிநாமா செய்தார். அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டு வயநாடு தொகுதிக்கு தேர்தல் ஆணையம் இடைத் தேர்தலை அறிவித்தது.
வரும் நவம்பர் 13-ம் தேதி வயநாடு தொகுதிக்கு இடைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு நடைபெற இருக்கிறது. இடைத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் பிரியங்கா காந்தியும், கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சத்யன் மோக்கேரியும், பாஜக சார்பில் நவ்யா ஹரிதாஸ் போட்டியிடுகின்றனர்.இவர்கள் வயநாடு தொகுதியில் அரசியல் கட்சியினர் தீவிரமாக தேர்தல் பரப்புரைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பிரியங்கா காந்தி தனது பிரசாரத்தின் போது
“மோடி தலைமையிலான மத்திய அரசு எடுக்கும் அனைத்துக் கொள்கை முடிவுகளும், அவரது ஐந்து முதல் ஆறு தொழிலதிபர்களுக்கு மட்டுமே பயன்படும், மக்களுக்கு அல்ல.
வயநாடு நிலச்சரிவின் போது, பாதிக்கப்பட்ட பகுதிகளை பிரதமர் மோடி நேரில் வந்து பார்வையிட்டு, உரிய உதவிகளை செய்வதாக உறுதியளித்துச் சென்றார்.
ஆனால், மாதங்கள் சென்ற பிறகும் கூட, பாஜக தலைமையிலான மத்திய அரசு நிலச்சரிவுப் பகுதிகளின் மறுசீரமைப்புக்கு எந்த நிதியும் வழங்காமல் புறக்கணிக்கிறது”
என்று உரையாற்றி உள்ளார்.