நட்சத்திரங்கள் நடிப்பை தவிர்த்து சைடு பிசினஸில் ஈடுபடுவது புதிதல்ல. விஜய் கல்யாண மண்டபங்கள் கட்டி வாடகைக்கு விடுகிறார். ஆர்யா ஹோட்டால் தொடங்கியிருக்கிறார். நெப்போலியன் சாப்ட்வேர் கம்பெனி வைத்துள்ளார்.
இந்த வரிசையில் தற்போது நடிகை ப்ரியங்கா சோப்ரா நியூயார்க்கில் சொந்தமாக ரெஸ்டாரண்ட் ஒன்றை தொடங்கியுள்ளார்.
2018 ஆம் ஆண்டு யுஎஸ் பாப் பாடகர் நிக் ஜோனஸை திருமணம் செய்து கொண்டார். அத்தோடு அவர் ஒரு அமெரிக்கப் பிரஜையாகவே மாறினார். யுஎஸ்ஸில் பல கோடிகள் மதிப்பில் பிரமாண்ட வீடு ஒன்றையும் வாங்கினார்.
தற்போது நியூயார்க் சிட்டியில் சோனா என்ற ரெஸ்டாரண்டை ப்ரியங்கா சோப்ரா திறந்துள்ளார். இது அவரது சொந்த ரெஸ்டாரண்ட்.