ன்னாவ்

ன்னாவ் பகுதியில் பலாத்காரம் செய்யப்பட்டவர்களால் எரித்துக் கொல்லப்பட்ட பெண்ணின் குடும்பத்தினரைக் காங்கிரஸ் செயலர் பிரியங்கா காந்தி நேரில் சென்று சந்திது ஆறுதல் கூறி உள்ளார்.

கடந்த வருடம் உத்திரப் பிரதேச மாநிலத்தில் உன்னாவ் பகுதியில் ஐந்து பேரால் பலாத்காரம் செய்யப்பட்ட பெண் காவல்துறையில் புகார் அளித்தார்.   அதையொட்டி  கைது செய்யப்பட்ட ஐவரில் இருவர் ஜாமீனில் வந்துள்ளனர்.   ஜாமீனில் வந்தவர்கள் தங்கள் கூட்டாளிகளுடன் சேர்ந்து அந்தப் பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளனர்.   நேற்று இரவு அந்தப் பெண் மரணம் அடைந்தார்.

தன்னை காப்பாற்ற வேண்டும் என அந்தப் பெண் மருத்துவமனையில்  கதறி அழுத செய்திகள் ஊடகங்களில் வெளியாகின.   இது அனைவர் மந்தையும் உருக வைத்தது.  உத்தரப் பிரதேசத்தை ஆளும் பாஜக அரசின் மெத்தனத்தால் பெண் மரணம் அடைந்ததாகப் பல எதிர்க்கட்சி தலைவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்

இந்த மரணத்துக்குக் காங்கிரஸ் பொதுச் செயலர் பிரியங்கா காந்தி வருத்தம் தெரிவித்துள்ளார்.   அத்துடன் இந்தக் குற்றவாளிகளால் அந்த பெண்ணுக்கு அபாயம் இருப்பது தெரிந்தும் பாதுகாப்பு அளிக்காத உபி மாநில பாஜக அரசுக்கு அவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மரணம் அடைந்த அந்தப் பெண்ணின் குடும்பத்தினரைப் பிரியங்கா காந்தி இன்று நேரில் சந்தித்தார்.  அந்தப் பெண்ணின் மரணத்தால் கடும் துயருற்ற அவர் குடும்பத்தினருக்குப் பிரியங்கா காந்தி ஆறுதல் தெரிவித்துள்ளார்.