‘யாவரும் நலம்’, ‘இஷ்க்’, ‘மனம்’, ’24’ உள்ளிட்ட வரவேற்பு பெற்ற படங்களை இயக்கிய விக்ரம் குமார் தற்போது தனது ‘கேங் லீடர்’ படத்துக்குப் பிறகு நாக சைத்தன்யா நடிக்கும் படத்தை இயக்கவுள்ளார் .
தில் ராஜு தயாரிக்கவுள்ள இந்தப் படத்திற்கு ‘தேங்க் யூ’ என்று பெயரிடப்பட்டுள்ளது .
ஆகஸ்ட் 29 நாகார்ஜுன் பிறந்த நாளன்று மகன் நாக சைத்தன்யாவின் படம் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.
இதில் ஒரு நாயகிக்கு ப்ரியா பவானி சங்கரிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது படக்குழு. இன்னொரு நாயகியாக ரகுல் ப்ரீத் சிங்கை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடக்கிறது.