திருச்சிக்கு நாலு மணிநேரம்… தயாராகும் தனியார் ரயில்கள்..

இந்தியாவில் இன்னும் மூன்று ஆண்டுகளில் சகல வசதிகளுடன் தனியார் ரயில்களை இயக்க இந்திய ரயில்வே துறை திட்டமிட்டுள்ளது.

100 வழித்தடங்களில் சுமார் 150 தனியார் ரயில்கள் இயக்கப்பட உள்ளன.

சென்னையில் இருந்து சுமார் 10 ரயில்களை நாட்டின் முக்கிய பகுதிகளுக்கு இயக்க திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

மதுரை, திருச்சி, கோவை, திருநெல்வேலி,கன்னியாகுமரி ஆகிய ரயில்கள் இதில் அடக்கம்

தனியார் ரயில்களின் சேவை தொடங்கி விட்டால், சென்னையில் இருந்து திருச்சிக்கு 4 மணி நேரத்தில் சென்று விடலாம்.

இந்தியாவின் தென்கோடி முனையான கன்னியாகுமரிக்கு 11 மணி நேரம் 45 நிமிடத்தில் போய்ச் சேரலாம்.

எல்லாம் சரி.

தனியார் ரயில்களில் கட்டணம் எப்படி இருக்கும்?

நிறையப் பேருக்கு வேலை போய் விடும் என்ற அச்சம் உள்ளதே?

‘’ அதற்கு வாய்ப்பே இல்லை’’ என்று மறுக்கிறார், ரயில்வே வாரிய தலைவர் வி.கே. யாதவ்.

‘’ தனியார் ரயில்களில் கட்டணம் அப்படி ஒன்றும் அதிகமாக இருக்காது.இப்போது ஓடிக் கொண்டிருக்கும் ரயில்களுடன், கூடுதலாகவே தனியார் ரயில்கள் இயக்கப்படுகின்றன.  அப்புறம் எப்படி வேலை போகும்?’’ என்று வினா எழுப்புகிறார், யாதவ்.

-பா.பாரதி.