சென்னை:
தனியார் பள்ளிகள் கோடை விடுமுறை நாட்களில் கோடை வகுப்புகள் நடத்தக்கூடாது என்றும், மீறி நடத்தினால் நடவடிக்கை எடுக்கப்படம் பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
பல தனியார் பள்ளிகள் 9ம் வகுப்பு மற்றும் 11ம் வகுப்பு தேர்வு முடிந்தவர்களுக்க 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு பாடங்கள் நடத்த தொடங்கிவிட்டனர். பல பள்ளிகளில் காலை 7 மணி முதலே சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இது பெற்றோர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது.
இது தொடர்பாக பள்ளி கல்வித்துறைக்கு புகார்களும் வந்துள்ளதாக கூறப்படுகிறது
இந்த நிலையில், கோடை விடுமுறையில் கண்டிப்பாக பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்த கூடாது. தற்போதைய நிலையில், வெப்பம் அதிகமாக இருப்பதால், பள்ளிகளுக்கு மாணவ மாணவிகளை சிறப்பு வகுப்புகள் என்ற பெயரில் தனியார் பள்ளிகள் உட்பட எந்த பள்ளிகளிலும் விடுமுறை நாளில் மாணவர்களுக்கு கோடை வகுப்புகள் நடத்தினால் பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று -பள்ளிக்கல்வி இயக்குனர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.