சென்னை,
தமிழகத்தில் தனியார் சட்டக்கல்லூரிகள் தொடக்க அரசு தடை விதித்து உத்தரவிட்டது. அரசின் உத்தரவை ரத்து சென்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.
இது தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், தமிழகத்தில் தனியார் சட்டக் கல்லூரிகள் தொடங்க தடை விதித்து பிறப்பிக்கப்பட்ட சட்டத்தை ரத்து செய்வதாக கூறியுள்ளது.
சமூக நீதி பேரவையைச் சேர்ந்த வழக்கறிஞர் பாலு தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம், தமிழகத்தில் தனியார் சட்டக்கல்லூரிகள் தொடங்க விதிக்கப்பட்ட தடையை நீக்கி உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் தனியார் சட்டக்கல்லூரி தொடங்குவதை தடுக்கும் விதமாக தமிழக அரசு கடந்த 2014–ம் ஆண்டு சட்டம் இயற்றியது.
இந்த சட்டத்தை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், எஸ்.எம்.எம்.கல்வி அறக்கட்டளை, வன்னியர் கல்வி அறக்கட்டளை உள்ளிட்டோர் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சய்கிஷன் கவுல், நீதிபதி டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, அகில இந்திய பார் கவுன்சில் சார்பில் வக்கீல் ஆஜராகி, ‘நாட்டில் உள்ள சில மாநிலங்களில் காளான் போல தனியார் சட்டக்கல்லூரிகள் உருவாகி வருகிறது இதை தடுக்கும் விதமாக, அனைத்து மாநிலங்களிலும் சரிசமமாக சட்டக்கல்லூரிகளை உருவாக்கவும், இந்த பிரச்சினைக்கு தீர்வு காணவும், சட்டக்கல்வி குழு ஒன்றை அகில இந்திய பார் கவுன்சில் உருவாக்கியுள்ளது.
இந்த குழு விரிவான விசாரணை நடத்தி வருகிறது. எனவே, இந்த குழுவின் விசாரணை முடியும் வரை வழக்கை தள்ளி வைக்க கோரிக்கை வைத்தனர்.
இதற்கிடையில் தனியார் சட்டக்கல்லூரிக்கு அனுமதி வழங்கக்கூடாது என அரசு சட்டக்கல்லூரி மாணவர்கள் தஞ்சாவூர், கோவை, நெல்லையில் போராட்டம் நடத்தினர்.
பார் கவுன்சில் கோரிக்கையை ஏற்று வழக்கு தள்ளி வைக்கப்பட்டது.
அதன்பிறகு நடைபெற்ற விசாரணையை தொடர்ந்து தனியார் சட்டக்கல்லூரி தொடங்க அரசு தடை செய்த ஆணையை சென்னை உயர்நீதி மன்றம் ரத்து செய்து, தனியார் சட்ட கல்லூரிகள் தொடங்க அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.
அத்துடன், வன்னியர் அறக்கட்டளை சார்பில் தனியார் சட்டக் கல்லூரி துவங்க அனுமதி கேட்டு பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி தொடர்ந்த மற்றொரு வழக்கில் தமிழக அரசுக்கு ரூ.20,000 அபாரதம் விதிக்கப்பட்டுள்ளது.