சென்னை:

மிழகத்தில், விவசாயிகள் தேவைக்காக னியார் உரக் கடைகள் விற்பனைக்காக திறந்து கொள்ளலாம் என்று தமிழகஅரசு அனுமதி வழங்கி உள்ளது.

நாடு முழுவதும் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை 21 நாட்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், விவசாயிகள் கடுமையான இழப்பை எதிர்கொண்டனர். விளைந்த விவசாய பொருட்கள், பழங்கள், பூக்கள் போன்றவை விற்பனை செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.

இந்த நிலையில்,  விவசாயிகள் சமூக விலகலை பின்பற்றி தங்களின் பணிகளை மேற்கொள்ள எந்த தடையும் இல்லை என்றும், விவசாயிகளுக்கு தேவையான உரங்கள் போதுமான அளவில் இருப்பில் உள்ளது  என்று தெரிவித்த தமிழக வேளாண் துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி, தனியார் உரக் கடைகள் விற்பனைக்காக திறந்து கொள்ளலாம் என்று தெரிவித்து உள்ளனர்.

ஏற்கனவே அத்தியாவசியத் தேவைகளுக்காக மளிகை, காய்கறிக் கடைகள் திறக்க அனுமதி வழங்கப்பட்ட நிலையில், சமீபத்தில் பேக்கரி திறக்க அனுமதி வழங்கப்பட்டது. தற்போது உரக்கடைகளையும் திறந்துகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.