நாடு முழுவதும் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக 5வது கட்ட ஊரடங்க ஜூன் 30ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதற்கிடையில் மத்திய மாநில அரசுகள் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால், அரசு போக்குவரத்துக்கழக பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகிறது.
கொரோனா தொற்று அதிகம் உள்ள சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களை தவிர்த்து பிற மாவட்டங்களில் அரசு பேருந்துகள் ஏற்கனவே மாநில அரசு பிரித்துள்ள மண்டலங்களில் இயக்கப்பட்டு வருகிறது.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களை தவிர்த்து பிற இடங்களில் தனியார் பேருந்துகள் இயங்கும். அரசு குறிப்பிட்ட மண்டலத்துக்குட்பட்ட பகுதிகளில் அரசின் விதிகளை பின்பற்றி 4,400 தனியார் பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவித்துள்ளார்.