டெல்லி:
கொரோனா ஊரடங்கில் போக்குவரத்துக்கு பெரும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், உள்நாட்டு விமான சேவைக்கும் ஜூன் 1ந்தேதி முதல் தளர்வுகள் வழங்கப்படும் என எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது.
இதை கருத்தில்கொண்டு தனியார் விமான நிறுவனங்கள் ஜூன் மாதத்தில் உள்நாட்டு விமானங் களை இயக்க முன்வந்துள்ளது. அதற்கான முன்பதிவுவை தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஊரடங்கு 4வது முறையாக மே 30ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதால், அனைத்து வணிக நடவடிக்கைகளும் நிறுத்தி வைக்கப்படும் என்று விமான ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், செவ்வாய்க்கிழமை (19ந்தேதி) மாலை செய்தியாளர்களிடம் பேசிய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப் பூரி, “உள்நாட்டு விமானங்களை மீண்டும் தொடங்குவது குறித்து முடிவெடுப்பது குறித்து ஆலோசிக்கப்பட்ட வருவதாகவும், மாநிலங்கள் விரும்பினால் அரசு சிவில் விமான நடவடிக்கைகளை அனுமதிக்க தயாராக உள்ளது என்று தெரிவித்தார்.
சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் அனைத்து விமானப் பங்குதாரர்களுக்கும் வரைவு SOP ஐ வெளியிட்டது. அதில், விமானப் பயணிகள் அனைவரும் கட்டாய ஆரோக்யா சேது பயன்பாடு, முகமூடிகள், சானிடைசர் உள்பட சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கப்பட வேண்டும் வலியுறுத்தி உள்ளது,
இதைத்தொடர்ந்து, ஜூன், 1ம் தேதி முதல், விமான சேவை துவங்கும் என்ற எதிர்பார்ப்பில், உள்நாடுகளில் இயக்கப்பட்டு வரும் சிறிய ரக குறைந்த கட்டணங்களை விமானங்களை இயக்கும் “இண்டிகோ, ஸ்பைஸ்ஜெட் மற்றும் கோ ஏர் மற்றும் ஏர் ஏசியா ஆகியவை உள்நாட்டு விமானங்களுக்கான முன்பதிவுகளை எடுக்கத் தொடங்கியுள்ளன.
முதல் இரண்டு-மூன்று நாட்களுக்கு விமானக் கட்டணங்கள் கிட்டத்தட்ட ஒரு டிக்கெட்டுக்கு ரூ .1000 அதிகமாக இருப்பதால் மக்கள் டிக்கெட் முன்பதிவு செய்யத் தயாராக இருப்பதாக தெரிவித்து உள்ளன.