மலையாளம் மற்றும் தமிழ் படங்களில் நடித்திருக்கும் நடிகர் பிரித்விராஜ் கொரோனா ஊரடங்கு தளர்விலும் பாது காப்பாக வீட்டில் இருக்கிறார். காமெடி மற்றும் கிளாசிக் பட பிரியரான பிரிதிவி ராஜ் ஒடிடியில் படம் பார்த்து ரசிக்கிறார்.
சிங்கீதம் சீனிவாசராவ் இயக்கத்தில் 3 வேடங்களில் கமல்ஹாசன் நடித்த ‘மைக் கேல் மதனா காமா ராஜன்’ படத்தை பிரித் விராஜ் மனைவி சுரியாவுடன் அமர்ந்து பார்த்தார். இப்படம் கடந்த 1990ம் ஆண்டு திரைக்கு வந்தது. ஹீரோ யின்களாக குஷ்பு, ரூபினி, ஊர்வசி நடித்திருந்தனர்.
படத்தைப் பார்த்து முடித்த பிரித்விராஜ் பிறகு தனது சமூக வலை தள பக்கத்தில், ’மைக்கேல் மதன காமராஜன் போன்று ஒரு சிலவையே கிளாசிக் படங்களாக இருக்கின்றன. கிரேட்டஸ்ட் நடிகர் கமல்ஹாசன், சாதனைகள் புரிந்த ஊர்வசி இருவரின் நடிப்பு மிகவும் அற்புதம். அவர்களை எவ்வளவு பாரட்டினாலும் போதாது. நான் என் மனைவி உடன் இந்த படத்தை ரசித்துப் பார்த்தேன்’ என தெரி வித்திருக்கிறார்.
மலையாளத்தில் முன்னணி நடிகர்களில் ஒருவரான பிரித்விராஜ் தற்போது ஆடுஜீவிதம் என்ற படத்தில் நடிக்கிறார். தமிழில் நினைத்தாலே இனிக்கும், மொழி, கனா கண்டேன் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார்.