‘கே.ஜி.எஃப்’ படங்களைத் தொடர்ந்து, பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘சலார்’. ‘கே.ஜி.எஃப்’ படங்களைத் தயாரித்த ஹொம்பாளே பிலிம்ஸ் நிறுவனமே இந்தப் படத்தையும் தயாரித்து வருகிறது.
தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என அனைத்து மொழிகளிலும் வெளியாகவுள்ள இந்தப் படத்தின் நாயகனாக பிரபாஸ் நடித்து வருகிறார்.
நாயகியாக ஸ்ருதிஹாசனும், முக்கிய வேடத்தில் ஜெகபதி பாபுவும் நடிக்கின்றனர். இந்தப் படத்தில் பிரதான வில்லன் வேடத்தில் நடிக்க பிருத்விராஜை அணுகியிருக்கிறார்கள்.
தமிழ்நாட்டிலும் பிரபாஸைவிட பிருத்விராஜே பிரபலம். இந்தியில் மூன்று படங்களில் நடித்து ஏற்கனவே அங்குள்ள ரசிகர்களுக்கு அறிமுகமானவர் பிருத்விராஜ். இத்தனை பாஸிடிவ் அம்சங்கள் இருப்பதால், அவரை பிரதான வில்லனாக்க முயற்சிக்கிறார்கள்.