சென்னை; கைதிகளின் உறவினர்களின் இறுதிச்சடங்கில் பங்கேற்க சிறைத்துறை அதிகாரிகளுக்கு அனுமதி வழங்கும்படி தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டு உள்ளது.

சிறைத்துறை அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரம் தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் சிறையிலுள்ள விசாரணைக் கைதிகளின் நெருங்கிய உறவினர்களின் இறுதிச்சடங்கில் பங்கேற்க சிறைத்துறை அதிகாரிகளே அனுமதி வழங்கும் வகையில் சுற்றறிக்கையை வெளியிட தமிழக உள்துறை செயலாளருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தாயின் இறுதிச் சடங்களில் பங்கேற்க புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தனது சகோதரருக்கு விடுப்பு வழங்கக் கோரி சகோதரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு அளித்தார். இந்த மனுவின் மீதான விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்தில் வந்தபோது, ”தண்டனைக் கைதிகளுக்கு விடுப்பு வழங்க சிறைத்துறை அதிகாரிகளுக்கு அதிகாரம் உள்ள நிலையில், விசாரணைக் கைதிகள் நீதிமன்றத்தை நாட வேண்டியுள்ளது” என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
மேலும், சிறையிலுள்ள விசாரணைக் கைதிகளின் நெருங்கிய உறவினர்களின் இறுதிச்சடங்கில் பங்கேற்பதற்கு சிறைத்துறை அதிகாரிகளே அனுமதி வழங்கும் சுற்றறிக்கையை தமிழக உள்துறை செயலாளர் வெளியிடவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
[youtube-feed feed=1]