சென்னை: சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்ப்டட சசிகலா அங்கு சிறைக்காலர்களுக்கு லஞ்சம் கொடுத்து, சொகுசு வாழ்க்கை வாழ்ந்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், சசிகலா மற்றும் இளவரசி இன்று பெங்களூரு நீதிமன்றத்தில் ஆஜர் ஆகின்றனர்.
சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டிருந்த சசிகலா, அவரது உறவினர் இளவரசி ஆகியோர், பெங்களூரு சிறைத்துறை அதிகாரிகளுக்கு கோடிக்கணக்கில் லஞ்சம் கொடுத்து சிறையில் சிறப்புச் சலுகைகள் பெற்றனர். இதுகுறித்து ஆய்வு செய்த டிஜிபி ரூபா இதுதொடர்பான வீடியோவையும் வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தினார். சிகலா சிறையில் சலுகை பெற டிஜிபி சத்யநாராயண ராவ் மற்றும் சிறை கண்காணிப்பாளர் கிருஷ்ணகுமார் ஆகியோருக்கு சசிகலா ரூ.2 கோடி லஞ்சம் அளித்ததாக ரூபா குற்றம் சாட்டினார். இதையடுத்து, இதுகுறித்து விசாரிக்க உத்தரவிடப்பட்டது.
கடந்த 2019 ஆம் ஆண்டு இதை விசாரித்த ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி வினய்குமார் குழு சசிகலாவுக்குச் சிறப்புச் சலுகை அளிக்கப்பட்டது உண்மை என அறிக்கை அளித்தது. இதையடுத்து, ஊழல் தடுப்பு காவல்துறையினர் சத்யநாராயண ராவ், கிருஷ்ணகுமார் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர்.
இந்த வழக்iக கர்நாடகா நீதிமன்ற நீதிபதி திபதி சதீஸ் சந்திர சர்மா விசாரித்து வருகிறார். கடந்த விசாரணையின்போது, (பிப்ரவரி 11ந்தேதி) பெங்களூரு சிறை சொகுசு வாழ்க்கை தொடர்பாக விசாரணை அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து, சசிகலா, இளவரசி ஆகியோர் மார்ச் 11ந்தேதி விசாரணைக்குஆஜராக நீதிமன்றம் சம்மன் அனுப்பியது.
இதையடுத்து சசிகலா, இளவரசி ஆகியோர் இன்று பெங்களூரு நீதிமன்றத்தில் ஆஜர் ஆவார்கள் என தெரிகிறது.
பெங்களூரு சிறை சொகுசு வாழ்க்கை: சசிகலா, இளவரசி நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு