அமெரக்காவின் தெற்கு கரோலின் அருகே உள்ள கொலம்பியா சிறைக்குள் பொரிஉருண்டையில் மறைத்து போதை மாத்திரையை கடத்தியதாக சிறைக் காவலர் மார்சியா ஷாபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடையில் இருந்து வாங்கப்பட்ட அசல் பாக்கிங்கில் இருந்து பிரித்தெடுத்த அரிசியால் ஆன திண்பண்டத்தின் நடுவே ஆரஞ்சு வண்ண மாத்திரைகளை வைத்து பாலிதீன் பைகளில் போட்டு பெண்கள் சிறையில் உள்ளவர்களுக்கு விநியோகிப்பதற்காக எடுத்துச் சென்றபோது பிடிபட்டார்.

பிடிபட்ட போதைமருந்து அடங்கிய பொட்டலத்தின் புகைப்படத்தை அம்மாகாண காவல்துறை வெளியிட்டுள்ளது, இது வயதுக்கு மீறிய இயக்க குறைபாடு உள்ளவர்களுக்குப் பரிந்துரைக்கப்படும் மருந்து என்பதும் இதனை பரிந்துரையில்லாமல் சிறைக்குள் கொண்டு செல்ல முயற்சித்ததாகவும் அவர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட அதிகாரிக்கு பத்தாண்டு வரை சிறைத் தண்டனை விதிக்க வாய்ப்பிருக்கிறது என்று கூறப்படுகிறது.