டில்லி,

ந்தியாவின் புகழ்பெற்ற திகார் சிறையில் கைதிகளிடையே மோதல் ஏற்பட்டது. இது சிறை வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கைதிகள் தப்புவதற்கு வசதியாக இந்த மோதல் திட்டமிட்டு நடத்தப்பட்டதா எனவும் விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்தி நாட்டின் முக்கிய சிறைச்சாலையாக விளங்கி வருகிறது டில்லியில் உள்ள திகார் சிறை. இந்த சிறைச்சாலைக்கு பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் போடப்பட்டுள்ளன. அங்கு ஆயிரக்கணக்கான கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் சிறைக் கைதிகள் இடையே நள்ளிரவில் மோதல் ஏற்பட்டுள்ளது. அவர்கள் கூர்மையான ஆயுதங்களை கொண்டு ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.

தகவலறிந்து வந்த சிறைக் காவலர்கள் அவர்களைத் தடுத்து நிறுத்தினர்.

அந்த சம்பவத்தில் 17 கைதிகள் காயமடைந்ததாகவும், அவர்கள் உடனடியாக உடனடியாக டி.டி.யு மற்றும் சப்தர்ஜங் மருத்துவமனைகளில் அவர்கள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சமீபத்தில் தொடர் குற்றங்களில் ஈடுபட்டு வந்த கைதிகள், சிறப்பு பாதுகாப்பு மிகுந்த அறைகளில் அடைக்கப்பட்டனர்.  அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மோதலில் ஈடுப்பட்டனரா அல்லது சிறையில் இருந்து தப்பிக்க முயற்சி செய்தனரா என்று விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.