டில்லி,

ரும் பிப்ரவரி 1ந்தேதி மத்திய பொதுபட்ஜெட் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த பட்ஜெட்டில் விவசாயதுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்

மத்திய பட்ஜெட்டுக்கான கவுன்டவுன் நிகழ்ச்சி நடைபெற்றது.  அதில் கலந்துகொண்ட  மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறியதாவது,

மத்திய அரசு கொண்டுவந்த பண மதிப்பிழப்பு மற்றும் சஜிஎஸ்டி போன்றவற்றால் நாட்டின் சூழலே மாறிவிட்டது. இந்த ஆண்டு சரி வருவாய் உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் இந்த ஆண்டு 18 சதவிகிதம் அளவு உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் அரசு கடன் பெறும் தொகையையும் குறைத்து, நிதிப்பற்றாக்குறையை கட்டுக்குள் வைத்துள்ளது என்றார்.

இந்த ஆண்டுக்கான பத்திய பட்ஜெட் தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த பட்ஜெட்டில் விவசாயத்துன்னு அதின முன்னுரிமை கொடுக்கப்படும். மேலும், நாட்டின்  அடிப்படை கட்டமைப்புக்கும் முன்னிரிமை அளிக்கப்படும் என எதிர்பார்ப்பதாக கூறினார்.

சாலை திட்டங்களுக்காக பட்ஜெட்டில் அடுத்த நிதியாண்டில் ரூ.1.50 லட்சம் கோடியாக உயர்த்த இருப்பதாகவும்,  ரூ. 8 லட்சம் கோடி முதலீட்டில் செய்யப்பட்டுவரும் சாலை, கப்பல், துறைமுகம், உள்நாட்டு நீர் வழிப் போக்குவரத்து ஆகிய திட்டங்கள்  மார்ச் மாதத்துக்குள் முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.