சென்னை: உடல் நலக்குறைவு காரணமாக அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஆற்காடு இளவரசர் நவாப் முகமது அப்துல் அலி,  தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாக அப்போலோ மருத்துவமனை தெரிவித்து உள்ளது.

ஆற்காடு இளவரசர் முகமது அப்துல் அலக்கு தற்போது வயது 70 ஆகிறது. வயது முதிர்வு காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு வீட்டிலேயே சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று உடல்நிலை மோசம் அடைந்ததைத் தொடர்ந்து  சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவர்  இதய செயல்திறன் குறைபாடு மற்றும் வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதையடுத்து, அவருக்கு  இதயத்தில், ‘ஆஞ்சியோ பிளாஸ்டி’ சிகிச்சை செய்து, ‘ஸ்டென்ட், பேஸ்மேக்கர்’ கருவிகள் பொருத்தப்பட்டன. தற்போது, அவர் தீவிர சிகிச்சை பிரிவில், தொடர் மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார் என அப்போலோ நிர்வாகம் தெரிவித்து உள்ளது.