சென்னை: பிரதமர் மோடி சொல்லும் “டபுள் என்ஜின்” எனும் “டப்பா என்ஜின்” தமிழ்நாட்டில் ஓடாது என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் தன்னுடைய சமூக வலைதளப் பதிவில் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் பாஜக – என்டிஏ டபுள் என்ஜின் அரசு நிச்சயம் ஆட்சிக்கு வரும். தமிழ்நாட்டை வளர்ச்சியடைந்த, பாதுகாப்பான, ஊழலற்ற மாநிலமாக மாற்றுவோம் என்று மதுராந்தகத்தில் நேற்று (ஜன. 23) நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணி பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசியிருந்தார்.
இதை விமர்சித்து முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், பிரதமர் சொல்லும் “டபுள் என்ஜின்” எனும் “டப்பா என்ஜின்” தமிழ்நாட்டில் ஓடாது! பிரதமர் அவர்களே… மத்திய பா.ஜ.க. அரசு ஏற்படுத்தி வரும் அத்தனை தடைகளையும் தகர்த்தெறிந்துதான் தமிழ்நாடு வரலாறு பேசும் வளர்ச்சியை அடைந்திருக்கிறது.
கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க… நீங்கள் சொல்லும் “டபுள் என்ஜின்” மாநிலங்களான உத்திரப் பிரதேசம், மத்திய பிரதேசம், பிகாரைவிட, தமிழ்நாடு, கேரளம், தெலங்கானா, கர்நாடகம், மேற்கு வங்கம் என உங்கள் “டப்பா என்ஜின்” நுழையாத மாநிலங்கள்தான் வளர்ச்சியில் கொடிகட்டிப் பறக்குது.
தமிழுக்கும் தமிழ்நாட்டுக்கும் பா.ஜ.க. செய்யும் துரோகங்களை, நீங்கள் மறைத்தாலும் என்டிஏ தமிழகத்திற்குத் துரோகம் செய்கிறது என்பதைத் தமிழ்நாட்டு மக்கள் ஒருபோதும் மறக்க மாட்டார்கள். தில்லியின் ஆணவத்துக்குத் தமிழ்நாடு தலைகுனியாது”.
இவ்வாறு பதிவிட்டுள்ளார்.
[youtube-feed feed=1]