அகமதாபாத்:

ர்தார் வல்லபாய் படேல் 144-வது பிறந்த நாளையொட்டி, குஜராத் சபர்மதி நதியில் அமைக்கப்பட்டுள் உலகின் உயரமான சர்தார் வல்லபபாய் பட்டேல் சிலைக்கு பிரதமர் மோடி மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

குஜராத் மாநிலத்தை சேர்ந்தவரான வல்லபாய் படேல் இந்தியாவின் இரும்பு மனிதர் என்று  அழைக்கப்பட்டவர். இந்தியாவின் முதல் உள்துறை மந்திரியாகவும் பதவி வகித்தவர். நாடு சுதந்திரம் அடைந்த பிறகு 550-க்கும் மேற்பட்ட குறுநில அரசுகளை இந்தியாவுடன் இணைத்தார். கடைசிவரை இணைய மறுத்த ஐதராபாத் நிஜாம், ஜூனாகத்(குஜராத்) நவாப் ஆகியோரை தனது வல்லமையால் இந்தியாவுடன் இணைய வைத்தவர்.

படேலுக்கு குஜராத் மாநிலம் நர்மதை மாவட்டத்தின் கெவாடியா என்ற கிராமத்தில் நர்மதை நதிக்கரையோரம் 182 மீட்டர்(597 அடி) உயரத்தில் பிரமாண்ட சிலை அமைக்கப்பட்டு உள்ளது.

இது உலகிலேயே உயரமான சிலை ஆகும். அமெரிக்காவின் சுதந்திர தேவி சிலையை விட இரண்டு மடங்கு உயரம் கொண்டது.இச்சிலைக்கு ஒற்றுமைக்கான சிலை என பெயர் சூட்டப்பட்டு உள்ளது. படேலின் 144-வது பிறந்த தினமான இன்று, பிரதமர் மோடி சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

பட்டேல் சிலைக்கு மலர்தூவி மரியாதை செய்த பிரதமர் மோடி – வீடியோ

https://www.youtube.com/watch?v=I2ShFHG7zJQ&feature=youtu.be