டெல்லி:

ந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் தீவிரமாகி உள்ள நிலையில், அதை தடுக்க எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள், மேலும் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, அனைத்து பாராளுமன்ற கட்சி தலைவர்களுடன் பிரதமர் மோடி காணொளி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில், காங்கிரஸ் கட்சி சார்பில் குலாம்நபி ஆசாத்,  அதிமுக சார்பில் நவநீதகிருஷ்ணன் எம்.பி.யும், திமுக சார்பில், டி.ஆர்.பாலு எம்.பி.யும் கலந்துகொண்டனர்.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் நோக்கில், நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு அமலில் உள்ளது. ஆனால், ஊரடங்கு முடிவடையும் நேரத்தில்தான் கொரோனா தொற்று தீவிரமடைந்து உள்ளது.  இன்றைய  நிலவரப்படி 5194 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. நேற்று ஒரே நாளில், 773 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் சம்பந்தமாக பிரதமர் மோடி ஏற்கனவே முன்னாள் குடியரசுத் தலைவர்கள், பிரதமர்களுடன் அலோசனை நடத்தினார். பின்னர் மாநில முதல்வர்கள், அனைத்துக்கட்சித் தலைவர்கள், மருத்துவர்கள், விளையாட்டு வீரர்களிடமும் ஆலோசனை மேற்கொண்டார்.

அடுத்தபடியாக இன்று அனைத்துக் கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற  தலைவர்களுடன் பிரதமர் மோடி இன்று வீடியோ கான்பரன்சிங் வாயிலாக ஆலோசனை நடத்தினார்.

தமிழகத்திலிருந்து திமுக சார்பில் நாடாளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர்.பாலுவும், அதிமுக சார்பில் மாநிலங்களவை குழுத் தலைவர் நவநீதகிருஷ்ணனும் கலந்துகொண்டனர்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள், கொரோனா தொற்று 3வது கட்டத்துக்கு செல்லும் நிலையில், அதை தடுப்பது குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

எடுக்கப்பட வண்டிய நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. மூன்றாவது கட்டமான சமூகப் பரவலைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. மேலும், ஊரடங்கை நீட்டிக்கலாமா, பாதிக்கப்பட்ட மக்களுக்கு வேறு என்னவகையான உதவிகள் தேவை போன்றவை குறித்தும் ஆலோசனை மேற்கொண்டதாகவும்,  மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்த எதிர்க்கட்சி தலைவர்களின் ஆலோசனைகளை வழங்கும்படி பிரதமர் கேட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது.