புதுடெல்லி:
முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்பட 8 மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நாளை காணொலி வாயிலாக ஆலோசனை மேற்கொள்ளவிருக்கிறார்.

கொரோனாபாதிப்பு குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்பட 8 மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நாளை காணொலி வாயிலாக ஆலோசனை மேற்கொள்ளவிருக்கிறார். நாடு முழுவதும் பெரும்பாலான மாநிலங்களில் கொரோனாபரவலின் தீவிரம் குறையாத நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட 8 மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நாளை ஆலோசனை மேற்கொள்ளவிருக்கிறார்.
நாளை காலை 10:30 மணிக்கு காணொலி மூலம் நடைபெறும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாநிலங்களில் கொரோனாபாதிப்பு நிலவரம், தடுப்பு நடவடிக்கைகள் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

இதில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் கலந்துகொள்கிறார். தமிழகம் தவிர ஆந்திரம், பிகார், குஜராத், கர்நாடகம், மகாராஷ்டிரம், பஞ்சாப், தெலங்கானா உள்ளிட்ட மாநில முதல்வர்களுடனும் பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொள்கிறார்.”
[youtube-feed feed=1]