ஸ்ரீரங்கம்: அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ்  தமிழ்நாட்டில்  9 ரயில் நிலையங்கள் உள்பட நாடு முழுவதும் புதுப்பிக்கப்பட்ட 103 ரயில் நிலையங்களை இன்று பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்.

அம்ரித் பாரத் திட்டத்தின்கீழ் நாடு முழுவதும் ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. அதன்படி, ரயில் நிலையங்களில் பொதுமக்களின் வசதிக்காக லிப்ட், நடை மேம்பாலம், கூடுதல் அறைகள், CCTV உள்ளிட்ட பல்வேறு வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன.  சிதம்பரம், ஸ்ரீ ரங்கம், தி.மலை உள்ளிட்ட தமிழ்நாட்டின் 9 ரயில் நிலையங்களும் இதில் அடங்கியுள்ளன. அம்ரித் பாரத் திட்டத்தில் 508 ரயில் நிலையங்கள் ரூ.24,470 கோடியில் மேம்படுத்தப்பட்டு வருகின்றன.

முன்னதாக, கடந்த 2023ம் ஆண்டு ஆகஸ்டு 23ந்தேதி அன்று ‘அம்ரித் பாரத்’  திட்டத்தின்கீழ, நாடெங்கும் உள்ள முக்கிய ரயில் நிலையங்களை உலக தரத்தில் பல்வேறு வசதிகளுடன் மேம்படுத்தும் நடவடிக்கை பிரதமர் மோடி அடிக்கல் நாட்டி  தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின் கீழ் இந்தியா முழுவதும் 508 ரெயில் நிலையங்கள் ரூ.24 ஆயிரத்து 470 கோடியில் மேம்படுத்தப்பட்டு வருகின்றனர். ‘  இந்த திட்டத்தின் கீழ் தெற்கு ரயில்வேக்கு உட்பட்ட 25 ரயில் நிலையங்கள் சீரமைக்கப்பட உள்ளன.

அதன்படி,  முதல் கட்டமாகத் தமிழகத்தில் செங்கல்பட்டு, பெரம்பூர், கூடுவாஞ்சேரி, திருவள்ளூர், திருத்தணி, கும்மிடிப்பூண்டி, அரக்கோணம், ஜோலார்பேட்டை, சேலம், கரூர், திருப்பூர், போத்தனூர், தென்காசி, விருதுநகர், மயிலாடுதுறை, தஞ்சை, விழுப்புரம், நாகர் கோவில் ஆகிய 18 ரயில் நிலையங்களில் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த பணிகள் முடிவடைந்த நிலையில், இன்று தமிழ்நாட்டின் 9 புதுப்பிக்கப்பட்ட ரயில் நிலையங்களை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.

பெட்டிகளில் கண்காணிப்பு கேமரா, நவீன இருக்கை வசதி, டிஜிட்டல் திரை: தமிழ்நாட்டுக்கு 2 அம்ரித் பாரத் ரயில்கள்