கர்நாடகாவில் தனது இரண்டு நாள் பயணத்தை முடித்துக் கொண்டு மண்டகள்ளி விமான நிலையத்தில் இருந்து திருவனந்தபுரம் சென்றார்.
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு இன்று காலை மைசூரு அரண்மனை என்று அழைக்கப்படும் அம்பா விலாஸ் அரண்மனை மைதானத்தில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றார்.
பிரதமருடன் மைசூரு மகாராஜா பரம்பரையைச் சேர்ந்த யதுவீர் கிருஷ்ணதத்தா சாம்ராஜ் உடையார் மற்றும் ‘ராஜ மாதா’ பிரமோதா தேவி உடையார் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
யோகா நிகழ்ச்சிக்குப் பின் தசரா கண்காட்சி மைதானத்தில் ‘புதுமையான டிஜிட்டல் யோகா கண்காட்சி’யை திறந்து வைத்தார்.
மீண்டும் அம்பா விலாஸ் அரண்மனைக்குத் திரும்பிய பிரதமர் மோடி மைசூரு மன்னரின் வாரிசுகள் அளித்த காலை உணவு விருந்தில் கலந்து கொண்டார்.
இந்த விருந்தில், மைசூர் ஸ்பெஷல் மைசூர்பாக் மற்றும் மைசூர் மசாலா தோசை தவிர பிரதமர் மோடிக்கு பிடித்த உணவுவகைகளை பரிமாறப்பட்டது.
இதுகுறித்து தெரிவித்த பிரமோதா தேவி உடையார் “சர்வதேச யோகா தினத்தின் போது மைசூரு வரும் பிரதமர் எங்கள் வீட்டுக்கு (மற்றவர்களுக்கு அரண்மனை) வந்து உணவருந்த வேண்டும் என்ற எங்கள் விருப்பத்தை தெரிவித்திருந்தோம்”
அதனை ஏற்று எங்கள் வீட்டில் வந்து பிரதமர் உணவருந்தினார் என்று தெரிவித்துள்ளார்.
பின்னர், இரண்டு நாள் கர்நாடக நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு கேரள மாநிலம் திருவனந்தபுரம் சென்றார்.