இஸ்லாமிய நாடான அபுதாபியில் கட்டப்பட்ட முதல் இந்துக்கோயிலை பிரதமர் மோடி திறந்து வைத்தார். இந்த கோவில் இந்தியாவுக்கும் ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கும் இடையே உள்ள ஆழமான உறவின் அடையாளமாகவும் திகழ்கிறது.
மத்திய கிழக்கு நாடுகளில் இந்த கோவில் மிகப்பெரிய கோவிலாக உள்ளது. இங்கு கோவில் கட்ட கடந்த 2015ஆம் ஆண்டு ஐக்கிய அமீரக நாடு நிலம் வழங்குவதாக அறிவித்தது. அதன் பின்னர் 2019ஆம் ஆண்டு கட்டுமானப் பணிகள் தொடங்கியது. 27 ஏக்கரில் பரந்து விரிந்து ரூபாய் 700 கோடி செலவில் கட்டப்பட்ட இந்த கோவிலுக்கு பெயர் BAPS கோயில் என சூட்டப்பட்டு உள்ளது. இந்த கோவிலில் மொத்தம் 7 கோபுரங்கள் உள்ளன. இந்த கோபுரங்களில் ராமர், சிவன், ஜகன்னாதர், கிருஷ்ணர், சுவாமிநாராயண் (கிருஷ்ணரின் மறு அவதாரமாகக் கருதப்படுகிறது), திருப்பதி பாலாஜி மற்றும் அய்யப்பன் உள்பட தெய்வங்களின் சிலைகள் உள்ளன.
அத்துடன் ஏழு ஷிகர்களும் அதாவது கோபுரங்களும் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் ஏழு எமிரேட்களைக் குறிக்கும் வகையில் அமைக்கப்பட்டு உள்ளதா, ” BAPS கோவிலின் தலைவர் பிரம்மவிஹாரிஸ் தெரிவித்து உள்ளது.
இந்த கோவிலை பிரதமர் மோடி திறந்து வைத்தார். இந்த கோவில் இந்தியாவுக்கும் ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கும் இடையே உள்ள ஆழமான உறவின் அடையாளமாகவும் பார்க்கப்படுகிறது.
கோவிலை திறந்து வைத்து பேசிய பிரதமர் மோடி , ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஒரு பொற்கால அத்தியாயத்தை எழுதியுள்ளது. இந்த கோவிலின் திறப்பு விழா பல வருட கடின உழைப்பு மற்றும் பலரின் கனவுகளால் இணைக்கப்பட்டுள்ளது. சுவாமிநாராயணின் ஆசீர்வாதமும் இணைக்கப்பட்டுள்ளது.
இதுவரை புர்ஜ் கலீஃபா, ஃபியூச்சர் மியூசியம், ஷேக் சயீத் மசூதி மற்றும் இதர ஹைடெக் கட்டிடங்களுக்கு பெயர் பெற்ற ஐக்கிய அரபு அமீரகம், தற்போது மற்றொரு கலாச்சார அத்தியாயத்தை தனது அடையாளத்தில் சேர்த்துள்ளது. வரும் காலங்களில் இங்கு ஏராளமான பக்தர்கள் வருவார்கள் என்று நான் நம்புகிறேன். ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு வருபவர்களின் எண்ணிக்கையையும் அதிகரிக்கும், மேலும் அவர்களுக்கும் ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கும் தொடர்பும் அதிகரிக்கும்.
இந்தியா மட்டும் இல்லாமல் உலகம் முழுவதும் பரவி வாழும் மில்லியன் கணக்கான இந்தியர்கள் சார்பில், ஜனாதிபதி முகமது பின் சயீத் அல் நஹ்யானுக்கும், ஐக்கிய அ எமிரேட் அரசுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றும் கூறினார்.
முன்னதாக இரண்டு நாள் சுற்றுப்பயணமாக ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சென்eற பிரதமர் மோடிக்கு ராணுவ மரியாதையுடன் உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அஹ்லான் மோடி நிகழ்ச்சியில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் மத்தியில் பிரதமர் மோடி பேசினார். இந்தியாவுக்கும் ஐக்கிய அரபு அமீரகத்துக்கும் இடையேயான உறவுகள் முன்னெப்போதும் இல்லாத வகையில் உச்சத்தை எட்டியுள்ளது என்று கூறினார்.
இந்த கோயிலுக்கு கடந்த 2017ஆம் ஆண்டு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசாங்கம் 2019 ஜனவரியில் மேலும் 13.5 ஏக்கரை ஒதுக்கியது. மேற்கு ஆசியாவின் மிகப்பெரிய இந்து கோயிலாக அமைக்கப்பட்டுள்ள இந்த பிரமாண்டமான கோயிலில் ஒரே நேரத்தில் 10,000 பேர் வரை தங்கலாம். அயோத்தி ராமர் கோவில் போல், இந்த கோயிலை கட்டுமான பணிகளுக்கு இரும்பு மற்றும் எஃகு பயன்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.