டில்லி:

த்திய பட்ஜெட் விரைல் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், பொருளாதார வல்லுநர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.

நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில் வரும் ஜூலை 5ந்தேதி மத்திய நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது. நிதிநிலையை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தாக்கல் செய்ய உள்ளார்.

முன்னதாக மாநில நிதிஅமைச்சர்கள் மற்றும் வணிக நிறுவனங்களின் ஆலோசனைகள் பெறப்பட்ட நிலையில்,  தற்போது பொருளாதார வல்லுநர்களுடன் ஆலோசனை நடைபெற்றது.

நிதிஆயோக் ஏற்பாடு செய்திருந்த இந்த கூட்டத்தில், பிரதமர் நரேந்திர மோடி பொருளாதார வல்லுநர்களுடன் கலந்துரையாடினார்.  இந்த மோடி 40 பொருளாதார வல்லுநர்களுடன்  கலந்துகொண்டனர். அவர்களுடன் மோடி கலந்துரையாடினார். அப்போது பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்ட தாக கூறப்படுகிறது.