சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்து வருகிறது. மேலும், புதிய கல்விக் கொள்கை, இஐஏ2020 போன்றவை சர்ச்சைக்குரியதாகி உள்ள நிலையில், பிரதமர் மோடி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியுடன் முக்கிய ஆலோசனை நடத்த உள்ளார்.
காணொளி காட்சி மூலம் நடைபெறும் இந்த கூட்டத்தில், ஆந்திரா, பீகார், குஜராத், உ. பி, மேற்கு வங்காளம், தெலங்கானா, மகாராஷ்டிரா முதல்வர்களும் இந்த கூட்டத்தில் பங்கேற்கின்றனர்.
தமிழகத்தில் கொரோனா நோய் தொற்று நாளுக்கு நாள் படிப்படியாக குறைந்து வருவதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறி வருகிறார். ஆனால், தொற்று பரவல் தினசரி 6ஆயிரத்தை எட்டுகிறது. இதனால் இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பில் தமிழகம் 2வது இடத்தில் உள்ளது.
அதுபோல நாடு முழுவதும் குறிப்பிட்ட10 மாநிலங்களில் தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதாக இந்திய சுகாதாரத்துறை அறிவித்து உள்ளது. அதில் தமிழகமும் ஒன்று. இந்த நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கை, பொதுமுடக்கம் உள்பட பல்வேறு பிரச்சினைகள் குறித்து, இன்று காலை 10.30 மணிக்கு பிரதமர் மோடி, தமிழக முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்துகிறார். மேலும், 8 மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நடத்தும் ஆலோசனை கூட்டத்தில் தமிழக முதல்வரும் கலந்து கொள்கிறார். ஆந்திரா, பீகார், குஜராத், உ. பி, மேற்கு வங்காளம், தெலங்கானா, மகாராஷ்டிரா முதல்வர்களும் இந்த கூட்டத்தில் பங்கேற்கின்றனர்.