சென்னை: பிரதமர் மோடி இலங்கையில் 3நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்ட நிலையில், அந்நாட்டு அதிபரிடம் தமிழக மீனவர் பிரச்சனை பற்றி பேசவில்லை என தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி குற்றம் சாட்டி உள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில், கச்சத்தீவு மீட்பு குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதுகுறித்த பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ளது. இந்த நிலையில், பிரதமர் மோடி 3 நாட்கள் இலங்கை பயணம் சென்றுள்ள நிலையில், அங்கு தமிழக மீனவர்கள் பிரச்சினை குறித்து இலங்கை அதிபரிடம் பேச வேண்டும் என தமிழ்நாடு அரசு மற்றும் அரசியல் கட்சிகள் தரப்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சட்ட அமைச்சர் ரகுபதி, நட்பு அடிப்படையில் இலங்கை சென்று உள்ள பிரதமர் மோடி இலங்கைக்கு சிக்கலான நேரங்களில் உதவிகளை செய்த தமிழ்நாடு அரசை மனதில் வைத்து, கச்சத்தீவு பிரச்னையை சுமுகமாகத் தீர்க்க வேண்டும் என்பதுதான் தமிழக மக்கள் மற்றும் முதலமைச்சரின் விருப்பம், ” எனத் தெரிவித்தார்.
இந்த நிலையில், நேற்று (மார்ச் 6ந்தேதி) புதிய பாம்பன் திறப்பு விழாவுக்காக ராமேஸ்வரம் வந்து நிகழ்ச்சியை தொடங்கி வைத்த பிரதமர் மோடி, மீனவர்கள் பிரச்சினை குறித்து ஏதும் பேசாதது விவாதப்பொருளாக மாறியது.
இந்த நிலையில்,. இலங்கை சென்ற பிரதமர் மோடி மீனவர் பிரச்சனை பற்றி பேசவில்லை என அமைச்சர் ரகுபதி குற்றம் சாட்டி உள்ளார்.
. இலங்கை கடற்படையால் கடந்த காலத்தில் 3684 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் 613 படகுகள் சிறைபிடிக்கப்பட்டு இருப்பதாக கூறியவர், இலங்கை சிறையில் வாடும் எஞ்சிய மீனவர்களை விடுதலை செய்வது தொடர்பாக எந்த தகவலும் இல்லை என்றார்.
மேலும், தமிழ்நாடு மீனவர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக ரூ.576 கோடிக்கு நலத்திட்டங்களை முதல்வர் அறிவித்தார். சேதமடைந்த படகுகளுக்கு நிதியுதவி அளித்துள்ள மாநிலம் தமிழ்நாடுதான் என்றும் தெரிவித்தார்.