திருப்பதியில் சாமி தரிசனம் செய்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று திருப்பதி வந்தார்.
முன்னதாக இன்று மாலை திருப்பதி மாவட்டம் ரேணிகுண்டா விமான நிலையம் வந்தடைந்த அவர் சாலை மார்க்கமாக திருப்பதி சென்றார்.
திருமலையில் உள்ள அர்ச்சனா கெஸ்ட் ஹவுஸ்சில் தங்கும் அவர் நாளை அதிகாலை ஸ்ரீவாரி சேவையின் போது சாமி தரிசனம் செய்ய உள்ளார்.
பிரதமராக பொறுப்பேற்றபின் 2015, 2017 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளில் திருப்பதி வந்த மோடி தற்போது நான்காவது முறையாக ஸ்ரீவாரி சேவையின் போது சாமி தரிசனம் செய்ய உள்ளார்.
பிரதமர் வருகையை ஒட்டி திருப்பதி மற்றும் திருமலையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
தெலங்கானா மாநில சட்டமன்ற தேர்தலுக்கான பிரச்சாரம் நவம்பர் 28ம் தேதி முடிவடைய உள்ள நிலையில் பிரதமர் மோடியின் திருப்பதி வருகை முக்கியத்துவம் பெற்றுள்ளது.