கொள்ளை லாபம் பார்த்த விமானநிலைய தேநீர்க் கடை விலையைக் குறைத்தது..

டெல்லி செல்வதற்காகக் கேரள மாநிலம் கொச்சியில் உள்ள விமானநிலையத்துக்கு ஷாஜி என்ற வழக்கறிஞர் கடந்த ஏப்ரல் மாதம் சென்றுள்ளார்.

அங்குள்ள தேநீர் கடையில் ’டீ’’ ஆர்டர் செய்து குடித்துள்ளார். நூறு ரூபாய் கேட்டுள்ளார், கடை ஊழியர்.

‘சிங்கிள் ‘டீ’க்கு நூறு ரூபாயா? என அலறிய ஷாஜி, இது குறித்துக் கடை உரிமையாளரிடம் வாக்கு வாதம் செய்துள்ளார்.

‘’மிக அதிக தொகை கொடுத்து இந்த கடையை ஏலம் எடுத்துள்ளேன். இந்த விலையில்  விற்றால் மட்டுமே போட்ட பணத்தை எடுக்க முடியும் ‘’ என கடை உரிமையாளர் பதில் சொல்லி இருக்கிறார்.

இது குறித்து ஷாஜி, கொச்சி விமான நிலைய அதிகாரிகள் மற்றும் விமான ஆணையம் போன்ற இடங்களில் புகார் செய்தார்.

எந்த நடவடிக்கையும் இல்லை. நேரடியாகப் பிரதமர் அலுவலகத்துக்குக் கொச்சி விமான நிலையத்தின் பகல் கொள்ளை குறித்து புகார் கடிதம் எழுதியுள்ளார்.

என்ன ஆச்சரியம்?

இப்போது கொச்சி விமான நிலைய தேநீர் கடை, டீ உள்ளிட்ட பொருட்களின் விலைகளைக் கணிசமாகக் குறைத்து விட்டது.

நூறு ரூபாய்க்கு விற்ற டீ, இப்போது வெறும் 15 ரூபாய். காபி 20 ரூபாய்.

வடை உள்ளிட்ட நொறுக்குத்தீனிகள் விலையும் மலிவாகக் கிடைக்கின்றன.

‘’இந்தியாவில் உள்ள மற்ற விமான நிலைய தேநீர் கடைகளிலும் இதுபோல் விலையைக் குறைக்க முயற்சி எடுப்பேன்’’ என்கிறார், ஷாஜி.

-பா.பாரதி.