ஜனாதிபதி தேர்தல்: மீராகுமார் இன்று வேட்புமனு தாக்கல்!

டில்லி: 

குடியரசுத்தலைவர் தேர்தலில் காங்கிரஸ் மற்றும்  எதிர்கட்சிகள் சார்பில் போட்டியிடும் மீராகுமார் இன்று (ஜூன் 28) வேட்புமனு தாக்கல் செய்கிறார்.

ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவி காலம் அடுத்த மாதம் 24ந்தேதியுடன் முடிவடைகிறது. இதைத்தொடர்ந்து புதிய ஜனாதிபதி தேர்தலை தேர்ந்தெடுக்கும் வகையில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது.

அடுத்த மாதம் (ஜூலை) 17ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.

ஏற்கனவே, பா.ஜ. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் சார்பில் பீகார் கவர்னர் ராம்நாத் கோவிந்த் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். அவர் கடந்த 23ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்துவிட்டார்.

இந்நிலையில் காங். தலைமையிலான எதிர்கட்சிகள் சார்பில் போட்டியிடும் லோக்சபா முன்னாள் சபாநாயகர் மீராகுமார் இன்று (ஜூன் 28) வேட்பு மனு தாக்கல் செய்கிறார்.

இவருக்கு காங்கிரஸ் உள்பட 16 கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.


English Summary
Presidential election: Miera Kumar nomination today