தமிழக சட்டப்பேரவை வளாகத்தில், நாட்டுக்காக பாடுபட்ட தலைவர்களை கவுரவிக்கும் வகையில் மறைந்த தலைவர்களின் படங்கள் வைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் படம் இடம்பெற உள்ளது. கருணாநிதி படத்தை திறந்து வைக்க குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை முதல்வர் ஸ்டாலின் டெல்லி சென்று நேரில் அழைப்பு விடுத்தார். இதனால், ராம்நாத் கோவிந்த் தமிழகம் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில், ஆகஸ்ட் 2ம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவையில் முன்னாள் முதல்வர் கலைஞர் உருவப்படத்தை குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் திறந்துவைக்கிறார் என சபாநாயகர் அப்பாவு அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் கருணாநிதி உருவப்படம்: ஆகஸ்டு முதல் வாரத்தில் திறப்பு?