டில்லி:

தீவிரவாதிகளுடன் நடந்த சண்டையில் வீர மரணம் அடைந்த ஜோதி பிரகாஷ் நிராலாவின் மனைவியிடம் அசோக் சக்ரா விருதை வழங்கிய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உணர்ச்சிவசப்படடு கண் கலங்கினார்.

குடியரசு தின விழாவை முன்னிட்டு டில்லியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தேசிய கொடி ஏற்றி வைத்து விருதுகளை வழங்கினார். அப்போது மறைந்த இந்திய விமானப்படை அதிகாரி ஜோதி பிரகாஷ் நிராலாவின் மனைவி சுஷ்மானந்த், தாயார் மாலதி தேவி ஆகியோரிடம் அசோக் சக்ரா விருதை ஜனாதிபதி வழங்கினார்.

அப்போது ஜனாதிபதி கண் கலங்கினார். கடந்த நவம்பர் 18-ம் தேதி காஷ்மீர் மாநிலம் பந்திப்போரா ஹாஜின் என்ற பகுதியில் தீவிரவாதிகளுடன் நடந்த என்கவுண்ட்டரில் ஜோதி பிரகாஷ் நிராலா, 2 தீவிரவாதிகளை சுட்டுக்கொன்றுவிட்டு வீர மரணமடைந்தார். அவரது தியாகத்தை பாராட்டி அசோக் சக்ரா விருது வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.