தமிழக ஜல்லிக்கட்டு போராட்டத்தை தொடர்ந்து தரம்தாழ்ந்து விமர்சித்து வருகிறார் பாஜக மூத்த தலைவர் சுப்பமரணியன் சுவாமி.  “ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என போராடுபவர்கள் பொறுக்கிகள், மன நோயாளிகல்” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் எழுதி வருகிறார்.

இந்த நிலையில், இன்று போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மாணவர்கள் மீது போலீஸ் தடியடி நடத்தியது. இதனையடுத்து ஆங்காங்கே கலவரங்கள் நடந்தன. சில மணி நேரம் சென்னை ஸ்தம்பித்து போனது.

துபற்றி தனது ட்விட்டர் பக்கத்தில், “தமிழகத்தில் குடியரசுத்தலைவர் ஆட்சியை கட்டாயம் கொண்டு வரவேண்டும்

மத்திய ரிசர்வ் போலீஸ் படை, எல்லை பாதுகாப்பு படை மற்றும் ராணுவ போன்றவற்றை கொண்டுவர வேண்டும். நக்சல்கள், ஜிகாதிகள் மற்றும் பொறுக்கிகளிடம் இருந்து தமிழகத்தை மீட்க இதுவே சரியான நேரம்” என்று சுவாமி குறிப்பிட்டுள்ளார்.

[youtube-feed feed=1]