டில்லி
யோகா ஆசிரியர் ஜக்கி வாசுதேவின் ஈஷா யோகா மைய சிவராத்திரி விழாவில் நாளை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கலந்துக் கொள்கிறார்.
இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று டில்லியில் இருந்து கிளம்பி 3 நாள் தமிழகப் பயணம் வருகிறார். அவர் டில்லியில் இருந்து கிளம்பி விமானப்படை விமானம் மூலமாக இன்று பிற்பகல் 3.30 மணிக்கு கோவை வருகிறார். கோவை விமான நிலையத்தில் ஜனாதிபதிக்கு அளுநர் பன்வாரிலால் புரோகித் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்டோர் வரவேற்பு அளிக்கின்றனர் அவர் அங்கிருந்து விருந்தினர் மாளிகைக்கு செல்கிறார்.
இன்று மாலை முக்கிய பிரமுகர்களை சந்திக்கும் ஜனாதிபதி இரவு விருந்தினர் மாளிகையில் தங்குகிறார். நாளை காலை அவர் சூலூர் விமானபடை தளத்தில் நடக்கும் நிகழ்வில் பங்கேற்கிறார். அங்கிருந்த் 11.45 மணிக்கு அரசு விருந்தினர் மாளிகைக்கு வந்து மதிய உணவை உட்கொள்கிறார். நாளை மாலை சுமார் 4.40 மணிக்கு ஜனாதிபதி காரில் கோவை விமான நிலையம் செல்கிறார்.
ஜனாதிபதி அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள ஈஷா யோகா மையத்துக்கு செல்கிறார். அங்குள்ள கோவில்களை மாலை 6 மணி முதல் 7 மணி வரை பார்வையிடும் ஜனாதிபதி 112 அடி உயரத்தில் அமைக்கபட்டுள்ள ஆதி யோகி சிலை வளாகத்துக்கு செல்கிறார். அங்கு அவர் ஒளி ஒலி காட்சியை தொடங்கி வைக்கிரார்.
நாளை இரவு ஈஷா யோகா மையத்தில் மகாசிவராத்திரியை ஒட்டி ஞானம், தியானம் ஆனந்தமென்னும் நிகழ்வு நடைபெறுகிறது. அந்த நிகழ்வில் கலந்துக்கொள்ளும் ஜனாதிபதி மீண்டும் கோவை வந்து இரவு தங்குகிறார். செவ்வாய்க்கிழமை காலை 9.45 மணிக்கு மீண்டும் விமானம் மூலம் அவர் டில்லி திரும்புகிறார்.