பாலி: இந்தோனேசியா தலைநகர் பாலியில் நடைபெற்ற 2நாள் உச்சி மாநாட்டின் நிறைவு விழாவில் இந்தோனேசியாவின் ஜனாதிபதி ஜோகோ விடோடோ ஜி20 தலைவர் பதவியை இந்தியாவிடம் ஒப்படைத்தார். அதன்படி, டிசம்பர் 1-ம் தேதி முதல் ஜி20 தலைவர் பதவியை இந்தியா அதிகாரப்பூர்வமாக ஏற்கிறது.
இந்தோனேசியாவின் பாலி நகரில் 2 நாள் ஜி-20 உச்சி மாநாடு நேற்று தொடங்கியது. இதில் அமெரிக்க அதிபர் உள்பட 20 நாடுகளின் தலைவர்களும் கலந்துகொண்டனர். ரஷ்ய அதிபர் புடின் மட்டும் கலந்துகொள்ளவில்லை. அவருக்கு பதிலாக வேறொருவர் கலந்து கொண்டார். இந்த 2 நாட்கள் மாநாட்டில் கலந்துகொள்ள பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் டெல்லியில் இருந்து புறப்பட்டு பாலி நகருக்கு சென்றார்.
இதைத்தொடர்ந்து, இதன்பின், பாலி நகரில் உள்ள அபூர்வா கெம்பிஸ்னிகி ஓட்டலில் ஜி-20 மாநாடு தொடங்கியது. வந்திருந்த தலைவர்களை இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோ முறைப்படி வரவேற்றார். பிரதமர் மோடி உள்பட தலைவர்கள் பலரும் மாநாட்டில் உரையாற்றினர். இந்த நிலையில், மாநாட்டின் ஒரு பகுதியாக இன்று 2-வது நாளில், பாலி நகரில் உள்ள இயற்கை எழில் சூழ்ந்த மாங்குரோவ் காடுகள் மற்றும் அந்நாட்டு வழிபாட்டு தலத்திற்கு பல்வேறு நாடுகளின் தலைவர்களும் பார்வையாளர்களாக சென்றனர். பின்பு மரக்கன்றுகளையும் நட்டனர்.
இன்று 2வது நாள் மாநாடு நடைபெற்றது. நிறைவு விழாவில் ஜி-20 தலைமைத்துவம் இந்தியாவிடம் முறைப்படி இன்று ஒப்படைக்கப்பட்டது. இதன்படி, இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோ ஜி-20 தலைமையை அதிகாரப்பூர்வ முறையில் பிரதமர் மோடியிடம் இன்று ஒப்படைத்து உள்ளார். இதன்மூலம் டிசம்பர் 1ந்தேதி முதல் ஜி20 தலைமையை இந்தியா அதிகாரப்பூர்வமாக ஏற்கும்.
இதன் நிறைவு விழாவில் பேசிய பிரதமர் மோடி, ஜி-20 தலைமையை இந்தியா ஏற்று நடத்துவது என்பது ஒவ்வோர் இந்தியருக்கும் பெருமை அளிக்கும் விசயம். இந்தியாவில் வெவ்வேறு மாநிலங்கள் மற்றும் நகரங்களில் ஜி-20 கூட்டங்களை நாங்கள் நடத்துவோம். நாம் அனைவரும் இணைந்து ஜி-20 அமைப்பை உலகளாவிய மாற்றத்திற்கான ஒரு வினையூக்கியாக உருவாக்குவோம் என கூறியுள்ளார். இந்தியாவின் ஜி-20 தலைமைத்துவம் எல்லாவற்றையும் உள்ளடக்கிய, குறிக்கோள் நிறைந்த, முடிவான மற்றும் செயல் சார்ந்து இருக்கும். அடுத்த ஓராண்டில், கூட்டு நடவடிக்கைக்கு தூண்டுதல் அளிக்கும் வகையிலான, சர்வதேச முதன்மை இயக்கம் ஆக ஜி-20 அமைப்பு பணியாற்றும் வகையில் செய்வது எங்களது கடுமையான முயற்சியாக இருக்கும் என்று தெரிவித்தார்.
முன்னதாக, ஜி20 மாநாட்டில் அமெரிக்க அதிபர் பைடன் உள்பட பல்வேறு நாட்டு தலைவர்களை சந்தித்து பிரதமர் மோடி பேசினார். இங்கிலாந்து பிரதமரான ரிஷி சுனத்தை நேற்று சந்தித்து பேசினார். இதையடுத்து இந்தியர்களுக்கு விஷா வழங்க உடடினயாக ரிஷி சுனக் உத்தரவிட்டுள்ளார். மேலும், மாநாட்டில் கலந்துகொள்ள வந்த படைன், பிரதமர் மோடிக்கு சல்யூட் அடித்ததும், அதற்க இருக்கையில் அமர்ந்தபடியே பிரதமர் மோடி ஹாய் சொன்ன சுவாரசிய சம்பவம் அரங்கேறியது. இது அங்கிருந்த மற்ற நாட்டு தலைவர்களிடையே வியப்பை ஏற்படுத்தியது. மேலும், பிரான்ஸ், ஜெர்மனி, சிங்கப்பூர் உள்ளிட்ட குறிப்பிட்ட நாட்டு தலைவர்களை நேரில் சந்தித்து இருதரப்பு உறவுகள் உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் பற்றி பிரதமர் உரையாடினார்.
ஜி20 உச்சி மாநாடு முடிந்ததும், பிரதமர் நரேந்திர மோடி இந்தோனேசியாவின் பாலியில் இருந்து இந்தியாவிற்கு விமானம் மூலம் புறப்பட்டார். அவரை இந்தோனேசிய அதிகாரிகள் வழியனுப்பி வைத்தனர்.