ஹைட்டி:
ஹைட்டியின் அதிபர் ஜோவனல் மொய்ஸ் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக இடைக்கால பிரதமர் கிளாட் ஜோசப், அதிர்ச்சியூட்டும் செய்தியை அறிவித்துள்ளார்.

 

ஹைட்டியின் அதிபர் ஜோவனல் மொய்ஸ் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக இடைக்கால பிரதமர் கிளாட் ஜோசப், அதிர்ச்சியூட்டும் செய்தியை அறிவித்துள்ளார்.

“அடையாளம் காணப்படாத ஒரு குழு, குடியரசுத் தலைவரின் வீட்டை தாக்கி, அவரை கொன்றுவிட்டனர். அவர்களில் சிலர் ஸ்பானிஷ் மொழி பேசினார்கள் என முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்ரன” என்று ஹைட்டி நாட்டின் இடைக்கால பிரதமர் கிளாட் ஜோசப் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அதிபர் ஜோவனல் மொய்ஸ் மற்றும் அவரது மனைவியும் சுடப்பட்டனர். நாட்டின் முதல் பெண்மணி பலத்த காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார். அவர், தற்போது கடுமையான பாதுகாப்பு மற்றும் மருத்துவ கண்காணிப்பில் உள்ளார்.

முதல்கட்ட அறிக்கையின்படி, போர்ட்-ஓ-பிரின்ஸ், அதிபரின் வீட்டில் இருந்தவர்கள் மீது கொடூர தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மேலதிக தகவல்கள் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை.

ஹைட்டி அதிபர் மாளிகையும் இந்த செய்தியை உறுதி செய்துள்ளது. அதில், அதிகாலை 1 மணியளவில் அதிபர் மாளிகை மீது தாக்குதல் நடந்தது என்றும், தாக்குதலில் முதல் பெண்மணியும் சுடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அதிபரின் மனைவி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.