சென்னை: பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ள  குடியரசு தலைவர் முர்மு  இரண்டு நாள் பயணமாக இந்த மாத இறுதியில் தமிழ்நாடு வருகை தர உள்ள தகவல் வெளியாகி உள்ளது.

குடியரசு தலைவர் முர்மு கடந்த ஆண்டு  சென்னை உத்தண்டியில் உள்ள கடல் சார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட நிலையில், இந்த ஆண்டும் மீண்டும் மத்திய பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ள தமிழ்நாடு வருகை தருகிறார்.

திருவாரூரில் உள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக் கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க தமிழகம்  குடியரசு தலைவர் தமிழ்நாடு வருகை தர உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதன்படி,   நவம்பர் 30-ஆம்  திருவாரூரில் உள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக் கழக பட்டமளிப்பு விழா நடைபெற உள்ளது. இந்த விழாவில் வருகை தரும் முர்பு, அங்கு மாணவ மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி சிறப்புரை ஆற்றுகிறார்.

தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம் ( CUTN ) திருவாரூரில் அமைந்துள்ள ஒரு மத்தியப் பல்கலைக்கழகம் ஆகும். பேராசிரியர் எம். கிருஷ்ணன் இந்த மத்தியப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக உள்ளார். இந்த பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ளவே முர்மு தமிழ்நாடு வருகைதருகிறார். இதையொட்டி, திருவாரூரில் பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீசார் தீவிரப்படுத்தவுள்ளனர்.